தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதுடன் ஒரு நாய் கூட விடுபடாமல் இருக்க ஊசி போடப்பட்ட நாய்களுக்கு அடையாளக் குறியீடு இட இக்கொள்கை வலியுறுத்துகிறது. அரசு கால்நடை மருத்துவமனைகளில் இயன்றவரை அதிகளவிலான தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் நாய்கள் மிகுந்த பகுதிகளுக்கு சென்று கருத்தடை சிகிச்சை செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதற்கென்றே திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் வெற்றிக்கு மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு உணவளிக்கவும் தத்தெடுக்கவும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இந்த வரைவு கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
இராயபுரம்
காசிமேடு சந்தையில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்