சென்னை: மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி

சென்னை ஒட்டியம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு மாலை மேற்கு வங்க தொழிலாளி செல்ல இரும்பால் ஆன படிக்கட்டை பிடித்து ஏற முயற்சித்த போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து கீழே விழுந்தார். 

இதைப் பார்த்த செவிலியர் ஒருவர் ஓடிவந்து அவருக்கு முதலுதவி அளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டின் மேற்கூரை வழியே செல்லும் மின்கம்பி இரும்பு படிக்கட்டு மீது உரசியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி