சென்னை: சிறையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு

சென்னையின் மத்திய பகுதியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புழல் சிறை. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 212 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் முதல் பகுதியில் குற்றவாளிகளும், இரண்டாம் பகுதியில் ரிமாண்ட் செய்யப்பட்ட கைதிகளும், பெண்களுக்கென பிரத்யேக சிறையும் என தனித்தனியாக 3 சிறைகள் உள்ளன. 

மேலும் மருத்துவ பரிசோதனை செய்ய தனி இடம் இருக்கிறது. இதுதவிர தியான மண்டபம், சமையலறை, நூலகம், ஆம்பி தியேட்டர், ஆடிட்டோரியம், ஜெயில் கோர்ட், வீடியோ கான்ஃபரன்சிங் வசதி, உயர் பாதுகாப்பு பகுதி, உடற்பயிற்சி கூடம், கேண்டீன், பொது இசை கட்டமைப்பு, புத்துணர்ச்சி மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில், புழல் சிறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் இன்று காலை புழல் சிறைக்கு சென்றனர். 

அங்கு சிறைவாசிகளுக்கான வசதிகள், உணவு தரம் குறித்து நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் சிறைவாசிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து தனிமைச் சிறை, உயர் பாதுகாப்பு சிறை, பெண்கள் சிறை ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி