சென்னை கோயம்பேட்டில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது, மாநகராட்சி ஊழியர்கள் மனித மண்டை ஓடு மற்றும் இரண்டு எலும்புகளைக் கண்டெடுத்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மண்டை ஓடு, எலும்புகளைப் பறிமுதல் செய்து, பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.