தமிழகத்தில் கடந்த வெள்ளி கிழமை மார்ச் 14ம் தேதி, எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8, 300 ரூபாய்க்கும், சவரன் 66, 400 ரூபாய்க்கும் விற்பனையானது. சனிக்கிழமை மார்ச் 15ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 8, 220 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 640 ரூபாய் சரிவடைந்து, 65, 760 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. வார துவக்க நாளான நேற்று (மார்ச் 17) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 சரிந்து, ஒரு சவரன் ரூ. 65, 680க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (மார்ச் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 66 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8, 250 விற்பனை ஆகிறது.