திருவள்ளூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று (நவம்பர் 11) மாலை வந்த மின்சார ரயிலில் பச்சிளம் பெண் குழந்தை கைவிடப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். பிறந்து சில நாள்களே ஆன குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டனர். குழந்தைகள் நலக் குழுமத்தின் மூலம் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தையை கைவிட்டுச் சென்றவரை அடையாளம் காண ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.