அதன் அடிப்படையில் கத்தி முனையில் மாமூல் கேட்டது சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கார்த்திக்கேயன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். சூளைமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கார்த்திக்கேயன் மீது 1 கொலை, 4 கொலை முயற்சி, வழிப்பறி உட்பட சுமார் 9 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த கார்த்திக்கேயன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த கார்த்திக்கேயனை சூளைமேடு தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்