சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் உள்ள ஈவிஎம் பிலிம் சிட்டியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் நசரத்பேட்டை காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.