சென்னையில் மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனிடையே செங்குன்றம் பாலவாயில் குமரன் நகரில் மழைநீர் சூழ்ந்ததால் வீட்டுக்குள் சிக்கிய 9 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.