சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் களஆய்வு மேற்கொண்டு பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. வரும் ஜூன் இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.