இந்நிலையில், எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வன், எனக்கு வீட்டில் திருமணத்துக்கு பெண் பார்க்கிறார்கள். ஆனால், எனக்கு நீதான் வேண்டும். என்னை திருமணம் செய்துகொள், என கூறி என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் மறுத்ததால், என்னை அவர் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, 'எனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் வேண்டாம். இந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்,' என போலீசாரிடம் கதறி அழுது ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, தமிழ்ச்செல்வனை சிறையில் அடைத்தனர்.