தமிழகத்தில் வரும் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக வேட்பாளர் இபிஎஸ்க்கு கண்ணாடி மாட்டி விட்டு முத்தம் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத இபிஎஸ் சிரிப்பை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் அங்கிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.