தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வது போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இயக்குநரான சசிகுமார் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கருடன் ஹிட் அடித்தது. இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால், அப்போது தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது. பிரீடம் படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் 'பிரீடம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் 'பிரீடம்' திரைப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இராயபுரம்
காசிமேடு சந்தையில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்