சென்னை கிளாம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் அன்பரசு, விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி பெற்றோரிடம் நடந்ததைக் கூறியதை அடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், அன்பரசு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.