சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாரியப்பன் (40) என்பவர், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளன்றே, ரூ. 34,500 பணத்துடன் அவர் மாயமானார். இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 10) அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.