தரமணி, கானகம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயபிரதா (45) என்பவரின் வீட்டில் கடந்த ஜனவரி 23 அன்று 54 சவரன் நகைகள் திருடு போனது. இதுகுறித்து தரமணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், ஆனந்த் (50) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 54 சவரன் நகைகள், ரூ. 7.5 லட்சம், செல்போன் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனந்த் பெயின்டிங் வேலை மற்றும் ரேபிடோவில் பைக் ஓட்டிக் கொண்டே திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.