இது குறித்து அளித்த புகார் மீது நொளம்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை நகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளன என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.