சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.46 பைசாவும், டீசல் விலை 2.57 பைசாவும் உயர்ந்துள்ளது. இது கடந்த இரண்டு வாரங்களில் 4-வது முறையாகும். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் பெட்ரோல் ரூ.107.77 ஆகவும், டீசல் ரூ.99.55 ஆகவும் விற்பனையாகிறது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலரைக் கடந்துள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தைகளிலும் விலை உயர்வு எதிரொலிப்பதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி