சென்னை மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு, சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளம் வழி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு 11.06.2025 முதல் 14.07.2025 வரை "விவசாயக் கூட்டுறவுப் பணியாளர் பயிற்சி நிலையம் (ACSTI) மாதவரம் பால் பண்ணைக் காலனி, மாதவரம், சென்னை – 600 051" (ஆவின் தலைமையகம் எதிரில்) நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
இணையவழி விண்ணப்பித்துள்ளோர் www.drbchn.in என்ற இணையதள முகவரியில் தங்களது நேர்முகத் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து தங்களுக்கு குறிப்பிட்டுள்ள நாளில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.