சென்னை, கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேணியில், 'சென்னை மொபைல்ஸ்' ஷோரூம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு, ஊழியர்கள் கடையை மூடி சென்றனர். நேற்று காலை ஷோரூம் மேலாளர் பிரேம்குமார், (30), கடையை திறக்க சென்றார். அப்போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, நேற்று முன்தின விற்பனை தொகை 1.70 லட்சம் ரூபாய், விலை உயர்ந்த ஆறு ஐ-போன்கள், இரண்டு சாம்சங் மொபைல் போன்கள் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.