சென்னை: கிரிக்கெட் வீரர் வீட்டின் அருகே இளைஞர் சடலம்

சென்னை அக்கரை கடற்கரை பகுதியில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டிற்கு பின்புறம், முகத்திலும் வாயிலும் செலோடேப் சுற்றப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சடலத்தின் அருகே கிடந்த பையில் இருந்து கிடைத்த தகவலின்படி, உயிரிழந்தவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கலையரசன் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி