சென்னை நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணியில் கன்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி மாணவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற வடபழனியைச் சேர்ந்த சாருகேஷ் (19) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்துவிட்டு அதிவேகமாக பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.