இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. படப்பிடிப்புக்காக வீடு போன்ற செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, 28 வயது இளைஞரான கார்த்திகேயன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.