இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 7.20 மணியளவில் உதயன் வீட்டின் வாசலில், அவரது மகள் யோகா பிரதிக்ஷா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மழைநீர் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக குழந்தை யோகா பிரதிக்ஷா பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்த குழந்தையை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, படுகாயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா vs ஜெர்மனி: இன்று ஜூனியர் ஹாக்கி போட்டி