இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இது குறித்து வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் அதே பகுதியில் உள்ள 70 கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து கிண்டியை சேர்ந்த வினோத் (28) என்பவர்தான் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் வினோத் கார் டிரைவர் என்பதும் மனைவி, குழந்தைகள் வெளியூர் சென்றிருந்ததால் கடந்த ஒரு மாதமாக இல்லற வாழ்வில் ஈடுபட முடியாமல் தவித்துவந்ததும் அதன் காரணமாகவே மதுபோதையில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.