தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சென்னையில் மீட்கப்பட்டுள்ளார். தந்தை உயிரிழந்த நிலையில், தாய் மறுமணம் செய்துகொண்டதால் ஆதரவின்றி தவித்த சிறுமி தனியாக சென்னைக்கு வந்து டீக்கடையில் வேலை கேட்டபோது, கடைக்காரர் அளித்த தகவலின் பேரில் அவர் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.