தேனாம்பேட்டையில் ஜெயபிரியா வீட்டில் திருடிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார். கடந்த 8ம் தேதி இரவு, ஜெயபிரியாவின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், ஸ்டோர் ரூம் கதவை உடைத்து காப்பர் வடங்களை திருடிச் சென்றார். இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து, தி. நகரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவரை நேற்று கைது செய்து, திருடப்பட்ட காப்பர் வடங்களை பறிமுதல் செய்தனர்.