அதுதான் நம்முடைய இயக்கத்துக்கும் - உங்களுக்கும் - எனக்குமான பெருமை. அடுத்து, கொஞ்சம் நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவிகிதக் கணக்கை சொல்கிறார்.தமிழ்நாட்டின் வரலாற்றில் சோழர்கள் ஆட்சியை பொற்காலம் என்று சொல்வார்கள். எதிர்காலத்தில் எழுதப்போகும் வரலாற்றில், மக்களாட்சி மலர்ந்த பிறகு அமைந்த ஆட்சிகளில் திமுகவின் ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவர்கள் இந்த கருப்பு – சிவப்புக்காரர்கள் என்று சொல்ல வேண்டும். நம் முழக்கம், வெல்வோம் 200. படைப்போம் வரலாறு என அவர் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!