அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல். கே. சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியது, எனது திருமணம் கருணாநிதி தலைமையில்தான் நடைபெற்றது. விஜயகாந்துக்கும், கருணாநிதிக்கும் 45 ஆண்டுகால நட்பு இருந்தது.
அதேபோல், முதல்வர் மு. க. ஸ்டாலினும், விஜயகாந்துடன் நட்பில் இருந்தார். விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நலம் விசாரித்தார். தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நட்பு ரீதியாக சந்தித்து நலம் விசாரித்தோம். நன்றாக இருப்பதாக கூறினார். விரைவில் குணமடைய வேண்டுமென அவருக்கு வாழ்த்து கூறிவிட்டு வந்தோம் என தெரிவித்தார்.