மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்(35). இவர், கோயம்பேட்டில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 17ம் தேதி மதியம் , நடந்து சென்ற போது, மூன்று பேர் அவரை கத்தியால் வெட்டி விட்டு பணத்தை பறித்து சென்றனர். அவர் அளித்த புகாரின் பேரில் வழிப்பறியில் ஈடுபட்ட சூர்யா(18) மற்றும் இரண்டு சிறுவர்கள் என, மூன்று பேரை போலீசார் நேற்று முன்தினம் (மே 19) கைது செய்தனர்.