சென்னை: டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு கடந்த 1ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. கடந்த 5ம் தேதி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு எட்டப்படாததால், போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி