10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு எண் வெளியீடு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வெழுத உள்ள மாணவர்களின் விவரம் மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் dgeapp.tnschools.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பிப்ரவரி 18ம் தேதிக்குள் இந்தப் பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த தகவலை பள்ளிகளுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி