நுங்கம்பாக்கம், தரமணி பகுதிகளில் நாளை மின்தடை

சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் தரமணி பகுதிகளில் நாளை (நவ.22) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மூர்ஸ் சாலை, கே.என்.கே. சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3வது தெரு ஆகிய பகுதிகளிலும், தரமணியில் எம்ஜிஆர் சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓஎம்ஆர், குறிஞ்சி நகர், கொட்டிவாக்கம், ஸ்ரீனிவாசா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி