சென்னை விமான நிலையத்தில் வானில் வட்டமடித்த விமானம்

சென்னை விமான நிலையப் பகுதியில் நேற்று பிற்பகலில், போயிங் ரக விமானம் ஒன்று சுமார் 2 மணி நேரம் வானில் வட்டமடித்துப் பறந்தது. விமானம் அவ்வப்போது தாழ்வாகப் பறந்து, பின்னர் உயரே செல்வது போல் காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய அதிகாரிகள், இது தனியார் பயிற்சி விமானம் என்றும், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் டிஜிசிஏவிடம் அனுமதி பெற்று, பெரிய ரக போயிங் விமானங்கள் தரையிறங்குவது குறித்து பயிற்சி விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இது வழக்கமான ஒன்றுதான் என்றும் விளக்கமளித்தனர். இதனால் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி