சென்னை: அரிசி மண்டி உரிமையாளர் கடத்தல்?: போலீசார் விசாரணை

சென்னை கொத்தவால்சாவடியில் அரிசி மண்டி வைத்துள்ள ஆனந்தகுமார், இரவில் கடையை மூடிவிட்டு வீடு திரும்பாததால் அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராயபுரம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அவரது பைக் மீட்கப்பட்டது. ஆனந்தகுமார் தனது உறவினர் தீபக் குமாரை தொடர்பு கொண்டு, தனக்கு ரூ.2 லட்சம் உடனடியாக வேண்டும் என்றும், தான் கடத்தப்பட்டதாகவும் கூறியதாக தகவல் வெளியானது. இது குறித்து கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி