சென்னை: ஆளுநர் ஆர். என். ரவியை மாற்ற வேண்டாம் - மு. க. ஸ்டாலின் கோரிக்கை

நாங்கள் தான் அடுத்த முதல்வர், அடுத்த ஆட்சி எங்களுடையதுதான் என்று அனாதையான நிலையில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவ்வாறு பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சி இளைஞர்கள் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. 

இதில் நாதக நிர்வாகிகள் 51 பேர் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, இன்று மாற்றுக்கட்சியில் இருந்து தங்களை இணைத்துக் கொண்டவர்களை திமுக சார்பில் வரவேற்கிறேன். அடுத்த முறையும் ஆளுநர் சட்டப்பேரவைக்கு வர வேண்டும். ஆளுநர் உரையை நாங்கள் கொடுப்போம். 

அதை அவர் படிக்காமல் வெளியே போக வேண்டும். அதையும் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். நான் பிரதமருக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கோரிக்கை வைக்கிறேன். தயவுசெய்து ஆளுநரை மாற்றிவிடாதீர்கள். அவரே இருக்கட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தொடர்புடைய செய்தி