சென்னை பல்கலைக்கழகம், 2018-19 கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் சேர்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்சார் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு வாய்ப்பை வழங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள இந்த தேர்வுகளுக்கு, வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக இளங்கலைக்கு ரூ. 7000, முதுகலைக்கு ரூ. 9000, தொழில்சார் படிப்புகளுக்கு ரூ. 12000 அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். இது குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.