சுங்கத்துறை அதிகாரி தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்த குஷாஹல் சதுர்வேதி (25) என்பவர், அண்ணா நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் வேலை முடிந்து திரும்பிய சக அதிகாரி புஷ்பன்ட்ரா (35), கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகித்து, கதவை உடைத்து உள்ளே சென்றபோது இந்த சம்பவம் தெரியவந்தது. திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி