தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் த. வெ. க வெற்றி பெற்று ஆட்சி அமைத்து முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுள்ளார். இந்நிலையில், த. வெ. க அரசின் முதல் சட்டசபை கூட்டம் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் கவர்னர் அர்லேக்கர் உரையாற்ற இருக்கிறார். அவரது உரையை தொடர்ந்து அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம், அதன்படி தமிழக அமைச்சரவை நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.