சென்னை: முன்னாள் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

டி. ஜி. பி. அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் ஒன்றில், கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு, அறிவாலயம், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம், அடையாறு போட் கிளப்பில் உள்ள கலாநிதி வீடு உள்ளிட்ட எட்டு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தியதில், எந்த வெடிப்பொருட்களும் கிடைக்கவில்லை. இதனால், இது ஒரு புரளி எனத் தெரியவந்தது. சைபர் கிரைம் போலீசார் மிரட்டல் விடுத்தது யார் என விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி