சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், காலை 10 முதல் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. நுழைவு கட்டணம் கிடையாது. இந்த வேலை வாய்ப்பில் பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி