இதைத் தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட அண்ணாமலை, குற்றவாளி ஞானசேகருக்கு அந்தப் பகுதியில் வசித்து வரும் கோட்டூர் சண்முகம் என்பவருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், கோட்டூர் சண்முகம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜனின் நெருங்கிய நண்பர் என குறிப்பிட்டிருந்தார். பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற காலத்தில், ஞானசேகரன் கோட்டூர் சண்முகத்திடம் பேசியதாகவும் கோட்டூர் சண்முகம் நடராஜனிடம் பேசி சிசிடிவி ஆதாரங்களை அழித்ததாகவும் பேட்டி அளித்திருந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட தன்னை குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் தனக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நடராஜன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்