கீழடி அகழாய்வு: தமிழக பாஜக வலியுறுத்தல்

கீழடி விவகாரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்யாமல் அதை ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள் என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை ஆளும் திமுக, தங்களது ஊழல், முறைகேடுகளையும், குடும்ப ஆதிக்கத்தையும் மறைப்பதற்காக, பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டு வருகிறது. 

இந்தியாவை துண்டாட வேண்டும் என்ற பிரிவினைவாத உள்நோக்கத்துடன் பிறந்த கட்சி தான் திமுக. அதனால் பிரிவினைவாத அரசியல் அக்கட்சிக்கு கைவந்த கலையாகிவிட்டது. எத்தனை தரவுகள் கேட்டாலும் அதை கொடுக்க தொல்லியல் ஆய்வாளர்கள் தயாராகவே இருப்பார்கள். அதை ஏன் முதல்வர் ஸ்டாலின் தடுக்க வேண்டும்? தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அகழாய்வு முடிவு இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாரா? கீழடி அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை மட்டுமல்ல, பல்வேறு அறிஞர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

கீழடி அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை கேட்ட அத்தனைக்கும் தரவுகள் கொடுத்து விட்டோம். மத்திய தொல்லியல் துறையிடம் இனி கேள்விகள் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினால் அதை ஏற்கலாம். எனவே, கீழடி விவகாரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்யாமல் அதை ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள் என்று ஏ. என். எஸ். பிரசாத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி