இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு ஜூலை 11 ஆம் நாளுடன் முடிவடைந்து விட்ட நிலையில், காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணையிட்டிருக்கிறது. வன்னியர்களுக்கான சமூகநீதியை மறுக்க அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் இந்த நாடகம் கண்டிக்கத்தக்கது.
1. சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் தமிழக அரசிடம் இல்லை; அவற்றைத் திரட்ட மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் தயாராக இல்லை எனும் போது, எந்த அடிப்படையில் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்த அறிக்கையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இறுதி செய்யும்?
2. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைவதற்குள் தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறதா?