சென்னை: தீபாவளி பண்டிகை - ஜவுளி கடைகளில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க தி. நகர் உட்பட வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நேற்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் புத்தாடை, நகை, பட்டாசு வாங்க வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் குவிந்தனர். குறிப்பாக தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு வணிக வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

இந்நிலையில், தியாகராயநகர், வண்ணாராப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகளில் 5 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள், 10 தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தியாகராயநகர் கட்டுப்பாட்டு அறையை 73585 43058, என்ற கைப்பேசி எண் மூலமாகவும், புரசைவாக்கம் கட்டுப்பாட்டு அறையை 78248 67234 என்ற செல்போன் எண் மூலமாகவும், பூக்கடை கட்டுப்பாட்டு அறையை 81223 60906 என்ற செல்போன் எண் மூலமாகவும் தொடர்பு கொள்ள பொது மக்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி