சென்னை மண்ணடியில் சிகரம், சிற்பி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களை நடத்தி வந்த ரவி(57), தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெயசந்திரன், பிரேமலீலா தம்பதியிடம் இருந்து ஏலச்சீட்டு மூலம் ரூ.2,34,83,125/- பெற்றுக்கொண்டு, மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி காசோலை பணமில்லாததால் ஏமாற்றப்பட்டதாகக் கூறி அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.