சென்னை தியாகராயநகரில் உள்ள மங்கள வில்லா அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3-வது தளத்தில் சிக்கிய 6 பேர் ஸ்கை லிப்ட் மூலம் மீட்கப்பட்டனர். மேலும், வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த வயதான தம்பதியினர் இரும்பு கேட்டை உடைத்து மீட்கப்பட்டு, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.