சென்னை: வழக்கறிஞர் மீது தாக்குதல்; மூவர் கைது

தி.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பூவேந்திரகுமார், கடந்த 13ம் தேதி இரவு தேனாம்பேட்டை அருகே போக்குவரத்து நெரிசலில் காரை நிறுத்தியபோது, பின்னால் வந்த நபர் ஹார்ன் அடித்து தொல்லை கொடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அந்த நபர் நண்பர்களுடன் சேர்ந்து வழக்கறிஞரை தாக்கி தப்பிச் சென்றார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த இம்ரான், கொடூங்கையூரைச் சேர்ந்த அன்சாரி, முனவர் பாட்ஷா ஆகிய மூவரை நேற்று (பிப்.23) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி