சென்னை: நடிகை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி 16 சவரன் நகை பறிப்பு

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர், வீட்டின் அருகே வசித்து வந்த பெண்ணிடம் சினிமாவில் நடிகை வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார். மேலும், சினிமா துறையில் பலரைத் தெரியும் என்று கூறி அந்தப் பெண் மற்றும் அவரது தம்பியை சென்னைக்கு அழைத்து வந்து, அங்கே அவர்களின் 16 சவரன் நகைகளைப் பெற்றுக்கொண்டு மாயமானார். இவர் மீது இதுபோல பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி