இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகங்களைச் செய்தவரும், மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட துணிச்சலுக்கு சொந்தக்காரருமான கடலூர் அஞ்சலையம்மாளின் 135-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம். அன்னையாருக்கு எனது வணக்கங்களைச் செலுத்துகிறேன். அஞ்சலையம்மாளின் தியாகம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. சென்னையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு நாள் அலங்கார ஊர்தியில் கூட அஞ்சலையம்மாளின் உருவச் சிலையை வைக்காமல் அவமதித்தது தமிழக அரசு; பாமக சார்பில் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு தான் அம்மையாரின் சிலை சேர்க்கப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துறைமுகம் ஆகியவற்றுக்கு அஞ்சலையம்மாளின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை. கடலூர் அஞ்சலையம்மாளின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக அவரது வாழ்க்கை வரலாற்றை பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு